அல்லாஹ் எங்களுடன், நாங்கள்….?

அமெரிக்கா ஈராக் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது முஸ்லிம் சகோதரர்கள் சிலருக்கு மத்தியில் நடந்த கலந்துரையாடல் இது.

“இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க உலகில் ஒருவரும் இல்லையா, என்ன உலகம் இது?” ஒருவர் அங்கலாய்த்தார்.

அங்கிருந்த பலரும் பல கருத்துக்களை தமது பங்கிற்கு முன்வைத்தனர். அக்கருத்தாடலின்போது அமெரிக்காவை அவர்கள் சாடி, சாபமிடத் தவறவில்லை. அவர்களிடையே ஒருவர் இப்படிக் கூறினார்:

“தட்டிக்கேட்க ஒருவருமில்லைதான். ஆனால் அல்லாஹ் இருக்கிறான். முஸ்லிம்கள் மீது கைவைத்தால் அவன் சும்மா இருப்பானா பாருங்கள், என்ன நடக்கும் என்று!”
அங்கிருந்த எவரும் இக்கருத்தை ஆட்சேபிக்கவில்லை. கதை தொடர்ந்தது.

“முஸ்லிம்கள் மீது கைவைத்தால் அல்லாஹ் சும்மா இருக்க மாட்டான்” என்ற அபிப்பிராயத்தை ஒருவர் பட்டவர்த்தனமாகக் கூறுகிறார். மற்றவர்கள் அவ்வாறு கூறவில்லையே தவிர இந்தக் கருத்தோடு முரண்பட்டுக் கொள்ளவில்லை. காரணம், முஸ்லிம்களின் அடிமனதில் “அல்லாஹ் எங்களுக்குரியவன்” என்ற மனப்பான்மை குடிகொண்டிருக்கிறது. இந்த மனப்பான்மை சரியானதா? இந்த மனப்பான்மை காரணமாக ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது போன்ற விடயங்களை இங்கு நாம் விளங்க முயற்சிப்போம்.Continue reading

ஹிஜ்ரத்திலிருந்து ஒரு பாடம்

நபிகளாரின் வாழ்வில் அதிபிரசித்தமான வரலாற்று நிகழ்வு எது? என்று ஒரு வினாவை எழுப்பினால் இவ்வாறான பதில்களை எமது சமூகத்திலிருந்து எதிர்பார்க்கலாம்.

நபிகளார் பிறந்த தினம் (மீலாத்)
நபித்துவம் அருளப்பட்ட தினம்
இஸ்ராவும் மிஃராஜும்
தாஇப் பயணம்
மதினாப் பயணம்
பத்ர் தினம்
ஹுதைபியா உடன்படிக்கை
மக்கா வெற்றி
இறுதி ஹஜ்

நபிகளாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது எது? என்பதைத் தங்களது ரசனைக்கேற்ப ஒவ்வொருவரும் தெரிவு செய்வார்கள். தங்களது தெரிவிற்கான நியாயங்களையும் முன்வைப்பார்கள்.

இத்தகையதொரு கேள்வி நபித்தோழர்கள் மத்தியில் ஒருமுறை எழுப்பப்பட்டது.

இஸ்லாமியக் கலண்டர் முறையை எந்த ஆண்டிலிருந்து துவங்கலாம்? அதற்குப் பொருத்தமான, பிரசித்தமான நிகழ்வு எது?Continue reading

இலங்கையர்கள் இல்லாத இலங்கை தேச அடையாளத்தை இழந்து நிற்கும் இலங்கையர்கள்!

IMG-20170327-WA0140நாம் இதுவரை (சென்ற இதழ்களில்) சிறுபான்மை சூழலொன்றில் ஒரு முஸ்லிமின் அடையாளங்கள் பற்றிக் கலந்துரையாடினோம். ஒரு முஸ்லிம் தனது மார்க்க அடையாளங்களோடு வாழ்வதற்கும் அந்த அடையாளங்கள் மூலமாக தனது சிறப்பியல்புகளை வெளிப்படுத்துவதற்கும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தவறான அபிப்பிராயங்களை களைவதற்கும் எந்த வகையில் கருமமாற்ற வேண்டும் எவற்றை முக்கியமானதாகக் கருத வேண்டும் எவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும்? என்ற விளக்கங்களையும் பார்த்தோம்.

அடுத்து ஒரு பிரஜையின் தேச அடையாளம் பற்றிய விளக்கத்துக்கு வருவோம். முஸ்லிமின் தேச அடையாளம் பற்றிப் பின்னர் பேசுவோம்

ஒரே வார்த்தையில் சொன்னால் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்பதே எமது தேச அடையாளமாகும். இலங்கையர்களாக இந்த நாட்டைச் சேர்ந்த அதிகமானவர்கள் வாழவில்லை என்ற வருத்தத்துடன் இந்த அடையாளம் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. இலங்கையர்கள் எனும் இந்த அடையாளம் ஓர் இனத்துக்கானதல்ல பலவகையான மக்களை தேசத்தின் அடிப்படையில் ஒன்று சேர்க்கும் ஒரு பொது அடையாளமே இதுவாகும்.Continue reading

சிறுபான்மைச் சூழலில் முஸ்லிமின் அடையாளங்கள்

சிறுபான்மைச் சூழலில் முஸ்லிமின் அடையாளங்கள் p2(முஸ்லிம்கள் தமது மார்க்க அடையாளங்களையும் தேச அடையாளங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் மார்க்க அடையாளங்கள் இரண்டை சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடரில்…) நற்குணங்கள் இத்தோடு முடிவடைவதில்லை. வாழ்வின் அனைத்து நிலைமைகளிலும் நற்குணங்கள் ஒரு முஸ்லிமிடம் பிரதிபலிக்க வேண்டும். இன்னும் சொன்னால் அவனது வாழ்வே நற்குணங்களாகத்தான் இருக்க வேண்டும். ‘(உலகில் இருக்கின்ற) அனைத்து உத்தமமான நற்குணங்களையும் பூர்த்தி செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்கள் மொழிந்த அருள் வாக்கு இஸ்லாம் என்றால் நற்குணங்கள்தான் என்றதோர் அர்த்தத்தை எமக்கு உணர்த்துகின்றது.Continue reading

உணவுச் சமூகமா? அறிவுச் சமூகமா?

உணவுச் சமூகமா அறிவுச் சமூகமாஒரு பறவை தனது சின்னஞ்சிறிய வயிற்றுக்கு எத்தனை கிரேம் உணவை உட்கொள்கின்றது? பின்னர் எத்தனை மைல்கள் வான்வெளியில் அது ஓயாமல் பறக்கின்றது என்பதை நினைத்தால் ஆச்சரியம் மேலிடாமல் இருக்க முடியாது.

அதேபோன்று ஓர் எறும்பு உட்கொள்ளும் உணவின் அளவையும் அது இரவு பகலாக ஓயாமல் அலைந்து திரிந்து செய்கின்ற வேலைகளையும் ஒப்பிடுகின்றவர்கள் ஆச்சரிய மடையாதிருக்க முடியாது.

மறுபுறம் அதிகம் அலையாமலும் குறிப்பிடத்தக்க வேலை என்று எதனையும் செய்யாமலும் குனிந்த தலையை நிமிர்த் தாமலும் வாய்க்குள் வருவதையெல்லாம் வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் மாட்டையும் ஒரு படிப்பினைக்கு எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.Continue reading

சிறுபான்மைச் சூழலில் முஸ்லிமின் அடையாளங்கள்

சிறுபான்மைச் சூழலில் முஸ்லிமின் அடையாளங்கள்ஒவ்வோர் இனத்தைச் சேர்ந்தவரும், மதத்தைச் சேர்ந்தவரும், மொழியைப் பேசுபவரும் தம்மை ஏனையோர் விளங்கிக் கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்குமான அடையாளங்களைக் கொண்டிருக்கின்றனர்.

“பல்வேறுபட்ட உங்களது மொழிகளும் நிறங்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளுள் உள்ளனவாகும்” என்ற கருத்தை அல்குர்ஆன் வலியுறுத்தியிருப்பது நாம் அறிந்ததே.”

நிறங்கள் மொழிகள் போன்று பழக்கவழக்கங்கள் பண்பாடுகள் நடத்தைக் கோலங்கள் என ஒவ்வொரு சாராரையும் மற்றொரு சாராரிடமிருந்து வேறுபடுத்தும் அடையாளங்கள் பல.

இந்த அடையாளங்களால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்ற சூழல் உருவாகுவது போல ஒருவரை ஒருவர் பிழையாகப் புரிந்து கொள்கின்ற… அல்லது ஒருவரை ஒருவர் வெறுக்கின்ற… ஒருவரால் ஒருவர் அசௌகரியமடைகின்ற… சூழலும் உருவாக முடியும். இன்றைய உலகில் அதிகம் நாம் காண்பது இரண்டாவது சூழலையே.Continue reading

அனைத்து சிறப்பம்சங்களுக்கும் மத்தியிலும் ஒரு வேதனை!

அனைத்து சிறப்பம்சங்களுக்கும் மத்தியிலும் ஒரு வேதனை!ஒரு சமூகம் அதன் வாழ்க்கை முறையும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளுள் ஒன்றாகும். அந்த அத்தாட்சிகள் தருகின்ற பாடங்களைக் கற்றால் ஒருவர் ஈமான் கொள்ள முடியும் என அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான். அத்தியாயம் 26 சூரதுஷ் சூஅராவைப் படித்துப் பாருங்கள். அதில் 7 சமூகங்களின் சரித்திரங்களை அல்லாஹ் சுருக்கிவைத்திருக்கிறான். அந்த வரலாற்றுச் சுருக்கங்கள் ஒவ்வொன்றினதும் முடிவில் பின்வரும் வசனங்கள் தொடராக வருவதை நீங்கள் அவதானிக்கலாம்.

“நிச்சயமாக இ(ந்த வரலாற்றுச் சுருக்கத்)தில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் அதிகமானோர் (அதிலுள்ள பாடங்களைக் கற்று) ஈமான் கொண்டவர்களாக மாறுவதில்லை.”

ஆக ஒவ்வொரு சமூகமும் அதன் வாழ்க்கை முறையும் எண்ணற்ற பாடங்களைக் கற்றுத் தரும் அத்தாட்சிகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றைக் கற்பவர்களாகவும் கற்றவற்றிலிருந்து படிப்பினைகள் பெறுகின்றவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.Continue reading

பிறந்து வாழ்தலும் அறிந்த வாழ்தலும்

பிறந்து வாழ்தலும் அறிந்து வாழ்தலும்ஒரு மனிதன் உலகில் பிறந்ததற்காக வாழ்ந்துவிட்டுப் போகலாம். அப்போது அவன் ஒரு சராசரி வாழ்க்கையையே வாழ்கின்றான். சராசரி வாழ்க்கை என்பதன் பொருள் சந்ததிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக வாழ்தல் என்பதாகும். உலகில் ஒரு மனிதன் தனது சந்ததிகளைப் பெருமளவு பெருக்கிக் கொண்டான் என்பது அவன் ஒரு சிரேஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தான் என்று பொருளல்ல. சிலபோது வசதிகளைக் குறைவாகப் பெற்றவனுடைய உள்ளத்தில் இருக்கும் ஆசைகள் வசதிகளை அதிகமாகப் பெற்றவனுடைய உள்ளத்திலும் இருக்கலாம். அவ்வாறாயின் இருவரும் வாழ்க்கை அந்தஸ்தில் சமமானவர்களே பொருளாதார அந்தஸ்தில் அவர்கள் வேறுபட்ட போதிலும் கூட…

எனவே எந்த மனிதனும் பிறந்ததற்காக வாழக் கூடாது. மாறாக ஏன் பிறந்தேன் என்பதை அறிந்தே வாழ வேண்டும். அறிந்து வாழ்தல்தான் பகுத்தறிவு கிடைக்கப் பெற்ற மனிதனின் அந்தஸ்துக்குத் தகுமானது.
Continue reading

கண்ணால் மட்டும் பார்ப்பதற்கு மனிதனை அல்லாஹ் படைத்திருக்க வேண்டியதில்லை

10கண்ணையும் கண் பார்வையையும் தந்த அல்லாஹ்வை கண் விழித்திருக்கும் நேரமெல்லாம் புகழ வேண்டும். வாயால் மட்டுமல்ல… கண்களாலேயே அந்த அருளுக்கான காணிக்கைகளை நாம் செலுத்த வேண்டும்.

விண்ணிலும் மண்ணிலும் இருக்கின்ற அற்புதங்களையும் அரிய பல காட்சிகளையும் இயற்கையின் ஆர்ப்பரிப்புகளையும் கண்டுகளிப்பதற்கு இந்தப் பார்வை கிடைத்திருக்காவிட்டால் உலகம் இருந்தென்ன பயன்? இருள் மண்டிக் கிடக்கும் ஒரு குகைக்கும் இந்த உலகிற்கும் அப்போது என்ன வித்தியாசம்?!

இருப்பினும் கண்களைத் தந்தவனை கண்ணிமைக்கும் நேரமாவது நினைத்துப் பார்க்காதவர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் குருடாகி விட்டார்களா? அவர்களுக்கு நடந்த கதியை அல்குர்ஆனின் 22: 46 ஆவது வசனம் மிகவும் வேதனைதோடு இப்படி எடுத்தியம்புகிறது.

அவர்கள் பூமியில் சென்று (அதிசயமான அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பார்த்து) வர வேண்டாமா? அவ்வாறாயின் சிந்தித்துணரும் இதயங்கள் அவர்களிடம் இருக்க முடியும். செவிமடுக்கும் காதுகளும் (அவர்களிடம்) இருக்க முடியும். நிச்சயமாக பார்வைகள் குருடாவதில்லை. நெஞ்சுக்குள் இருக்கும் (உணர்வற்ற) இதயங்களே குருடாகின்றன. Continue reading

தினமும் 17 முறை சமர்ப்பிக்கும் பிரார்த்தனை

9பருவமடைந்த ஒவ்வொரு முஸ்லிமும் நாள் தவறாமல் கண்டிப்பாக 17 முறை கேட்கும் பிரார்த்தனையொன்று அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரார்த்தனைக்காக மட்டும் அல்லாஹ் ஓர் அத்தியாயத்தை அல்குர்ஆனில் இறக்கி வைத்துள்ளான். அதுதான் ஸூரதுல் பாதிஹா. அதில் நாம் இவ்வாறு பிரார்த்திக்கின்றோம்: (ஹிதாயத் எனும்) நேர்வழியை எமக்குக் காட்டுவாயாக!

தினமும் பர்ளான தொழுகைகளை மட்டுமே ஒரு முஸ்லிம் தொழுதாலும் கூட 17 தடவைகள் ஸூரதுல் பாதிஹாவை ஓத வேண்டியேற்படுகிறது. அப்போது எமக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! என அவன் பிரார்த்திக்கின்றான்.

இந்தப் பிரார்த்தனையின் முக்கியத்துவம் என்ன?Continue reading