மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதிய இனம்

dnaஇது சிங்கள இனமல்ல.. சிங்கள மக்கள் வேறு.. இவர்கள் வேறு. சிங்கள மக்கள் எங்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்… ஓரிரண்டு வருடங்களல்ல.. ஒரு மிலேனியத்துக்கும் மேலாக.. அவர்கள் எங்களைத் தெரிந்திருக்கிறார்கள்.. நாம் அவர்களைத் தெரிந்திருக்கிறோம்.. அவர்கள் எங்களை வெறுக்கவுமில்லை.. நாம் அவர்களைப் பகைக்கவுமில்லை.. அவர்கள் எங்களை விசனத்தோடு பார்க்கவில்லை.. நாங்கள் அவர்களுக்குத் துரோகம் இழைக்கவுமில்லை.. அவர்களது இடங்களை அபகரிக்கவோ.. அவர்களது உடமைகளுக்கு சேதம் விளைவிக்கவோ.. அவர்களது உயிர்களைக் காவு கொள்ளவோ நாம் எப்போதும் துணிந்ததில்லை.Continue reading

கத்தியும் கழுத்தும் சந்தித்த பொழுதினில்…

கத்தியும் கழுத்தும் சந்தித்த பொழுதினில்“மகனே! நான் (என்) கனவில் (தொடர்ந்தும்) உன்னை அறுத்துப் பலியிடக் காண்கிறேன். நீ என்ன கருதுகின்றாய் என்பதை (ஒரு முறை) நோட்டமிட்டுப்பார்!”

“தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை (தயக்கமின்றி) நிறைவேற்றுங்கள். இன்ஷா அல்லாஹ் என்னை ஒரு பொறுமையாளி யாக நீங்கள் கண்டுகொள்வீர்கள்.”

ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் வெறிச்சோடியிருந்த மினா பள்ளத்தாக்கில் இரண்டு உருவங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் சொந்தக்காரர்கள் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அண்ணலாரின் செல்வப் புதல்வர் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும்தான்.Continue reading

சிகிச்சையா? சித்திரவதையா?

சிகிச்சையா சித்திரவதையாமனித உடலில் இரண்டு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

  1. உடலின் இயற்கையான கட்டமைப்பில் (Inbuilt System) ஏற்படுகின்ற கோளாறுகள்.
    உதாரணம்: நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் இரத்தத்தில் இருக்க வேண்டிய செங்குருதி, வெண்குருதித் துணிக்கைகளின் அளவு, இரத்தத்தில் இருக்க வேண்டிய சீனியின் அளவு, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் என்பவற்றின் அளவு, சுரக்கும் சுரப்பிகளின் அளவு போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவையனைத்தும் அளவாக இருந்தால் உடலில் இயக்கம் சீராக இருக்கும். இருக்க வேண்டிய அளவை விட இவை அதிகமானால் அல்லது குறைந்தால் உடலின் கட்டமைப்பு (Inbuilt System) பாதிப்படைகிறது. விளைவாக உடல் பலவீனமடைகிறது.
  2. மற்றுமொருவகைப் பாதிப்புக்கள் உடலுக்கு வெளியே இருந்து வருகின்றன. இத்தகைய பாதிப்புகள் பல்வேறு காரணிகளால் வரலாம். நீரினால்… காற்றினால்… கிருமிகளினால்… மழையினால்… குளிரினால்… கடும் வெப்பத்தினால்… உடலைக் காயப்படுத்தும் ஒரு பொருளினால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Continue reading

உலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்

உலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்சாதகமாகவோ பாதகமாகவோ எல்லோரும் பேசுகின்ற… எல்லோராலும் பேசப்படுகின்ற பேசுபொருளாக ஒரு செய்தி மாறுகின்றபோது அது பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் அதி கரிக்கின்றது. தன்பால் மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. பலரும் அதனைத் தேட… அறிய… ஆவல் கொள்கின்றனர். இறுதியில் தன் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வருகின்றது. அது போலியாகப் பேசப்பட்ட விடயங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றது. அந்த முற்றுப்புள்ளி பொய்யர்களின் வாய்களை அடக்கி விடுகின்றது. உண்மையின் பேரோளியை உலகிற்கு பாய்ச்சி விடுகின்றது.

இந்தக் கருதுகோளை மனதில் இருத்திய வண்ணம் இஸ்லாத்தின் செய்தி அன்றும் இன்றும் பேசுபொருளாக மாறியிருப்பது பற்றி ஒரு பார்வையை செலுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.Continue reading

மூன்று பாத்திரங்கள் நிரம்பினால் தளம்பாது…

மூன்று பாத்திரங்கள் நிரம்பினால் தளம்பாது...“நிறைகுடம் தளம்பாது” என்பார்கள். அனைத்தும் நிறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் தளம்பல் ஏற்படாது என்பது இதன் பொருளல்ல. சொத்து, செல்வங்கள், அதிகாரம், அந்தஸ்துகள் ஒரு மனிதனிடம் நிறைவாக இருக்கலாம். அவற்றால் அவனது வாழ்க்கை தளம்பாது என்றில்லை. அவற்றின் மூலம் அவனு டைய வாழ்க்கை சில போது தடம் புரளவும் முடியும். சிலபோது அவற்றை நல்வழியில் பயன்படுத்தி ஒரு மனிதன் தனது வாழ்க்கைப் பாதையை வெற்றிகரமானதாக அமைத்துக் கொள்ளவும் முடியும்.

ஆக, “நிறைவு“ அனைத்திலும் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. மனித வாழ்க்கையில் தளம்பல், தடுமாற்றம், குழப்பம் என்பன நீங்கிச் செல்ல வேண்டு மானால் மூன்று விடயங்களில் நிறைவு அவசியம் இருந்தாக வேண்டும். அம்மூன்று விடயங்களிலும் நிறைவு காணாமல் ஏனைய எத்துணை விடயங்களில் நிறைவு கண்டாலும் மனித வாழ்க்கையின் குழப்பம் தீராது. தடுமாற்றமும் தளம்பலும் தொடரவே செய்யும். அத்தகைய தடுமாற்றம், குழப்பங்களிலிருந்து ஒரு நேரம் ஓய்வு கிடைத்தால் மறுநேரம் முன்பிருந்ததை விட அந்தத் தடுமாற்றமும் தளம்பலும் அவனை வேகமாகத் தாக்கும். அவன் அவற்றால் எப்போதும் மனச் சஞ்சலங்களிலும் போராட்டங்களிலும் சிக்கித் தவிப்பான்.Continue reading

உணர்வுகளை உறையச் செய்யும் சோர்வு

fb_img_14840227129958574உதவாத யோசனைகள், செயலிழக்க வைக்கும் கவலைகள், சோம்பேறித்தனம், இயலாமை, கோழைத்தனம், கருமித்தனம், கடன் பளு, எதிரிகளின் அடக்குமுறைகள் போன்றவற்றிலிருந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். நாமும் அவற்றிலிருந்து அல்லாஹ் விடம் பாதுகாப்பு தேடுவோம்.

மனிதனை சோர்வு என்ற நோயில் படுக்க வைக்கும் காரணிகள்தாம் அவை. அந்த நோய் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விட்டால் அவன் பொருளில்லாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பான். உட்கார்ந்தால் எழும்புவான், ஏன் என்று தெரியாமல்… நின்றிருந்தால் உட்கார்வான், களைப்பே இல்லாமல்… நடந்தால் தடுமாறுவான், வேலையே இல்லாமல்… நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பான் விடயதானமே இல்லாமல்… நேரத்தை வீணாக்குவான் கவலையே இல்லாமல்…

பொருளற்ற… அர்த்தமற்ற… நோக்குகளற்ற… போக்குகளற்ற ஒரு வாழ்க்கை வாழ்பவன்தான் சோர்வு என்ற நோயால் பீடிக்கப்பட்டவன். அவனுக்கு அவனது உள்ளம் வெறுமையாகவே தோன்றும். அவனது கைகள் வெறுமையாக இருப்பது போல… அவனது உலகமும் வெறிச்சோடியது போன்று காணப்படும், ஆகாயத்தைப் போல… பெருமூச்சுக்களோடும் ஏக்கங்களோடும் அவன் வாழ்ந்து கொண்டிருப்பான். எதையும் செய்யலாம், சாதிக்கலாம் என்ற எண்ணம் வருவதற்கு அவனைப் பீடித்திருக்கும் சோர்வு என்ற நோய் இடமளிக்கவே மாட்டாது. கடுமையாக உழைத்து சாதிப்பவர்களை அவன் விரக்தியோடன்றி பார்க்க மாட்டான்.Continue reading

தனி மனிதன் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் வேறு! சமூகம் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் வேறு!

தனி மனிதன் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் வேறு! சமூகம் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் வேறு!இந்தத் தலைப்பை அதிகமானவர்கள் நிச்சயம் ஜீரணிக்க மாட்டார்கள். இஸ்லாத்தை இவர்கள் இரண்டாக்கி விட்டார்கள் என்றே இதனைப் பார்த் துப் பலர் கூறப் போகிறார்கள். அவ்வாறில்லை, இஸ்லாம் நிச்சயம் ஒன்றுதான். எனினும், அந்த ஒன்றுக்குள் அனைவருக்குமான வழிகாட்டல்கள் வேறு வேறாக இருக்கின்றன.

இஸ்லாம் உருவாக்க விரும்புகின்ற ஓர் அலகுதான் தனிமனிதன் மற்றுமோர் அலகு சமூகமாகும். தனிமனிதனை உருவாக்கும் விடயத்தில் இஸ்லாம் கடைப்பிடிக்கும் ஒழுங்குகள் வேறு சமூகத்தை உருவாக்கும் விடயத்தில் கடைப்பிடிக்கும் ஒழுங்குகள் வேறு. அந்த வேறுபாட்டையே இந்த ஆக்கத் தின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.. மாறாக, இஸ்லாத்தை இரண்டாக்கும் முயற்சியல்ல இது.

இந்தத் தலைப்பை இப்படியொரு வினாவுக்குள் உள்ளடக்கினால் விடயம் இன்னும் எளிதாகிவிடும்.

தனிமனிதன் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறான் என்றால் அதன் பொருள் என்ன? ஒரு சமூகம் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறது எனின் அதன் பொருள் என்ன?Continue reading

ஹஜ் ஒரு தியாகப் பயணம்

ஹஜ் ஒரு தியாகப் பயணம்“ஹிஜ்ஜுல் பைத்” எனப்படும் இறையில்லத் தரிசனம் ஓர் இணையில்லா அனுபவம். படைத்தவனது இல்லம் நோக்கி படைப்பினங்கள் மேற்கொள்ளும் தியாகப் பயணம். ஹஜ்ஜில் எத்தனை தியாகங்கள்?

நிய்யத் ஒரு தியாகம்

“லப்பைக்“ – உனது அழைப்பை ஏற்றுவிட்டேன் என்று கூறும் போதே இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்ற உணர்வை பற்றிக் கொள்கிறது. இறைவா உன்னை நினைத்து விட்டேன். உனக்காக புறப்படுகிறேன் என்ற புளகாங்கிதம் உடம்பெல்லாம் பரவுகிறது. உற்றார் உறவினர்களின் உறவுகளை விடுவித்துக் கொண்டு “அல்வுர்வதுல் வுஸ்கா” எனும் அறுபடாத அல்லாஹ்வின் உறவோடு தன்னை இறுகப் பிணைத்துவிட்டதொரு நம்பிக்கை மலர்கிறது. வீடு வளவுகளும், சொத்து சுகங்களும் ஒரு முறை நீர்க்கானலாக தோன்றி மறைந்து விடுகின்றது. “லப்பைக்.. லப்பைக்.. அல்லாஹும்ம லப்பைக்” நாவிழும் நினைவிழும் நனைந்த நாதங்களாக வெளிவருகின்றன. உள்ளம் இந்த உலகத்தை விட்டகல்கிறது. ஒரு புதிய உலகம் நோக்கி ஒரு புதிய பயணம் ஆரம்பமாகிறது.Continue reading

முஸ்லிம் அரசியலின் புதிய திசை… எதிர்வரும் பொதுத் தேர்தல் அதனைத் தீர்மானிக்குமா?

 

11064814_883088588423810_2058272893319706839_nநல்லாட்சிக்கான கோரிக்கை வெற்றி பெற்று ஒரு புதிய அரசு நாட்டில் உதயமாகியிருக்கிறது. அந்த அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு எதிர்க் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு வழங்கியிருக்கின்றன. அண்மையில் புதிய அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கெதிராக பாராளுமன்றத்தில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு நன்மை தரும் வரவு செலவுத் திட்டம் என்பதனால் அதனை எதிர்க்க எவரும் துணியவில்லை என்பது கண்கூடு. கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட வீண்விரயங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு அவற்றினால் மக்கள் பயனடையும் நிலை தோன்றியுள்ளது. எரிபொருள் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.Continue reading

நாகரிக வளர்ச்சியை நலிவடையச் செய்யும் சமூக நோய்கள்

5சமூகம் என்ற உடம்பில் மூன்று ஆரோக்கியக் கூறுகள் இருக்கின்றன. அந்த ஆரோக்கியக் கூறுகளை சமூகத்தின் விலை மதிப்பற்ற செல்வங்கள் என்றும் கூறலாம். அத்தகைய ஆரோக்கியக் கூறுகள் பலவீனப்பட்டால் அல்லது சிதைவடைந்தால் சமூகம் நோயுற்ற சமூகமாக மாறும்.

அவையாவன:

  1. ஒரு சமூகம் சுமந்திருக்கின்ற சிந்தனைகள்.
  2. அது தன்னகத்தே கொண்டிருக் கின்ற ஆளுமைகள்.
  3. ஒரு சமூகம் சுமந்திருக்கின்ற சிந்தனைகளாலும் கொண்டிருக்கின்ற ஆளுமைகளாலும் அதிகபட்ச பயன்களை குறிப்பிட்ட சமூகமும் தேசமும் பெற்றுக் கொள்ளுமளவு கல்வியையும் ஒழுங்கு முறைமைகளையும் மேம்படுத்தல்.

இந்த மூன்று ஆரோக்கியக் கூறுகளையும் இனங்கண்டு அவற்றை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கும் எந்த சமூகமும் உலகில் ஒரு நாகரிக அந்தஸ்தைப் பெற்ற சமூகமாக மாறலாம். பல சமூகங்கள் ஒன்றிணைந்து வாழும் ஒரு நாடும்கூட தனக்குரிய சிந்தனைகள், தனது தேசம் உள்ளடக்கியிருக்கும் ஆளுமைகள் மற்றும் தமது தேசக் குழுமங்களிடையேயும் மக்களிடையேயும் உருவாக்குகின்ற கல்விச் சூழல் மற்றும் ஒழுங்கு முறைமைகள் என்பவற்றினூடாகவே ஒரு நாகரிகமடைந்த நாடாக மாறலாம்.Continue reading