சுபீட்சமான வாழ்வை நோக்கி

சுபீட்சமான வாழ்வை நோக்கி

“மன அமைதி” உலகில் அநேகர் தொலைத்து விட்டு இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருக்கும் ஒரு பெறுமதி மிக்க சொத்து.

கானல் நீர் போல தேடத் தேடத் தூரமாகிக் கொண்டிருக்கும் அந்த அரும் பொக்கிஷத்தை அல்லாஹ் எமக்கே வைத்திருக்கிறான்.

அது பரந்த உலகத்தில் அல்லாஹ் திறந்து வைத்திருக்கும் ஒரு இரகசியமாகும்.
அது பணம், பொருள், வசதிகள், அந்தஸ்துகள், அதிகாரங்கள், மாளிகைகள், கோட்டைகள் என்பவற்றில் இல்லை.

நீர் போல, காற்றுப் போல, ஆகாயத்தைப் போல அனைவரும் பெற முடியுமான அல்லாஹ்வின் தூய மறை, திக்ர் என்னும் குர்ஆனிலே இருக்கின்றது.

“ஈமான் கொண்டவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் திக்ரினால் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் திக்ரினால் மட்டுமே உள்ளங்கள் அமைதி பெறலாம்.”
அருள் மறையின் இந்த வசனம் கூறுவது என்ன என்பதே இந்த ஏட்டின் சுருக்கமாகும்.